ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பில் டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஈரான் – இஸ்ரேல் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் மோதல்கள் நீடித்து வந்த நிலையில், அது முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜுன் 24, 2025 - 10:54
ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பில் டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஈரான்  மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வந்த போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் மோதல்கள் நீடித்து வந்த நிலையில், அது முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்திற்கு முழுமையாக ஒப்புக்கொண்டன என கூறியுள்ளார்.

அணு ஆயுத உற்பத்தி விவகாரத்தில் கடந்த சில நாட்களாக ஈரான் – இஸ்ரேல் இடையே கடும் முதல் நிலவி வந்தது. ஜூன் 13, 2025 அன்று இஸ்ரேல், ஈரான் மீது முதல் முதலில் தாக்குதல் நடத்தியது. 

ஆபரேஷன் ரைசிங் லைன் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு, ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3 என்ற பெயரில் ஈரான் பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. 

இதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன. இதன் காரணமாக ஏராளமான சேதங்கள் மற்றும் உயிர் இழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஈரான் – இஸ்ரேல் விவகாரத்தில் தொடர்ந்து ஈரானுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூன் 22, 2025 அன்று ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தினார். 

இதற்கு அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்கும் என ஈரானின் உச்சபட்ச தலைவர் முகமது அலி காமெனி எச்சரிக்கை விடுதிருந்தார். அந்த வகையில் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. 

இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது டிரம்ப், அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டன. இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகள் முடிந்தவுடன் சுமார் ஆறு மணி நேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தை தொடங்கும். 

தொடர்ந்து 12 மணி நேரத்தில் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை தொடங்கும். அடுத்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த போர் பல ஆண்டுகளாக நடந்து மத்திய கிழக்கையே அழித்திருக்க வேண்டிய ஒரு போராக அமைந்திருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அது ஒருபோதும் நடக்காது. இஸ்ரேல் மற்றும் ஈரானை கடவுள் ஆசிர்வதிப்பார். மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவையும் கடவுள் ஆசீர்வதிப்பார். உலகையை கடவுள் ஆசிர்வதிப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!