திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அமைப்பு அங்குரார்ப்பணம்

தலைவராக திருப்பதி துறையும், செயலாளராக எஸ்.சக்தீபன், பொருளாளராக எஸ்.பிரியதர்சினி உட்பட ஏனைய நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு என தெரிவுகள் நடைபெற்றன.

ஜுன் 22, 2023 - 18:42
திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அமைப்பு அங்குரார்ப்பணம்

ஹஸ்பர்

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அங்குரார்ப்பண வைபவம், திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நேற்று (21) நடைபெற்றது. 

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பி.மதனவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுற்றுலாத் துறை விருத்தி மற்றும் குறித்த வலையமைப்பை பதிவு செய்வதன் ஊடாக திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத் துறை தொழில்வாண்மையான துறைகளில் முன்னேற்றம் காண்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இதில் தலைவராக திருப்பதி துறையும், செயலாளராக எஸ்.சக்தீபன், பொருளாளராக எஸ்.பிரியதர்சினி உட்பட ஏனைய நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு என தெரிவுகள் நடைபெற்றன.

இதில் கிழக்கு மாகாண சுற்றுலா பணியக பொது முகாமையாளர் டொக்டர் ஞானசேகரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!