டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் டயானா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையை, ஜூலை 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள போலி ஆவணங்களை பயன்படுத்தியமை மற்றும் செல்லுபடியான விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் டயானா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.