சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ப்ரியந்த வீரசூரிய, மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 4, 2023 - 16:54
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நிர்வாகத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நிலந்த ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ப்ரியந்த வீரசூரிய, மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய மாகாணத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட சஞ்சீவ தர்மரத்ன, சபரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் பயிற்சி பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் S.C.மெதவத்த, பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

வட மத்திய மாகாணத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட கித்சிறி ஜயலத், கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட M.D.R.S.தமிந்த, வட மத்திய மாகாண பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஸ்ரீ

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!