இன்றைய வானிலை அறிவித்தல்; மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்...
நாட்டின பல பகுதிகளில் இன்று(25) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின பல பகுதிகளில் இன்று(25) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன், வடமாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக் கூடும்.
இடியுடன் கூடிய மழையால் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.