இலங்கை ரூபாயில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (21) சிறிதளவு அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (21) சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 307.34 ரூபாயில் இருந்து 307.14 ரூபாய் வரையும் விற்பனை விலை 317.16 ரூபாயில் இருந்து 316.81 வரை வீழ்ச்சியடைந்துள்ளது.