துணிவு - வாரிசு முதல் நாள் வசூல் விவரம்
கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே தினத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது.

துணிவு - வாரிசு
கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே தினத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்ளுக்கு மத்தியில் நல்ல விமர்சன பெற்று வருகிறது. படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகிறார்கள்.
இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் எந்த படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, வாரிசு திரைப்படம் 22 கோடி வசூல் செய்துள்ளதாகவும், துணிவு திரைப்படம் 25 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அந்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அஜித்தின் துணிவு படம் வெளியான முதல் நாளில் அதிகம் வசூல் செய்துள்ளதாக பரவும் தகவலால் அவருடைய ரசிகர்கள் #King of Opening என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.