கோர விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழப்பு
சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரில் இருவர், நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

நாரம்மல – பெந்திகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாரம்மலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்கள் மீது மோதியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரில் இருவர், நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பெந்திகமுவ பகுதியைச் சேர்ந்த 56, 59 மற்றும் 61 வயதுடைய பெண்களே இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.