பாடசாலை மாணவன் மீது தாக்குதல் ; சந்தேக நபர்கள் மூவர் கைது
குறித்த காணொளி கேகாலை , பிட்டிஹும பிரதேசத்தில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கேகாலை பகுதியில் உள்ள பாடசாலை மாணவனை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவன் மீதான தாக்குதல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், இது தொடர்பில் பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, குறித்த காணொளி கேகாலை , பிட்டிஹும பிரதேசத்தில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கேகாலை பிரதேசத்தில் வசிக்கும் 16 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.