பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் விடுதலை

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மார்ச் 31, 2022 - 23:30
பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் விடுதலை

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது நபரொருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுங்காக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!