மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமறியல்
ஆஸ்திரிய சுற்றுலாப் பெண் ஒருவரிடம் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (07) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரிய சுற்றுலாப் பெண் ஒருவரிடம் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணிடம் இருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் 50,000 ரூபாய் பணம் வழங்குமாறு சந்தேகநபர்கள் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.