2024 ஜனாதிபதி தேர்தல் - மேலும் மூன்று வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் மூன்று வேட்பாளர்கள் இன்று (09) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 வேட்பாளர்களும், 13 சுயேட்சை வேட்பாளர்களும், ஏனையஅரசியல் கட்சியில் இருந்து ஒருவரும் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்.
நவ சமசமாஜ கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரியந்த புஷ்பகுமார, ‘அபே ஜன பல பக்ஷய’ கட்சியைச் சேர்ந்த ஜே.டி.கே. விக்கிரமரத்ன மற்றும் சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.திலகராஜா ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.