தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத சிசு மரணம்!

தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் சிசு திடீரென மயங்கி விழுந்துள்ளது.

ஆகஸ்ட் 20, 2024 - 14:58
தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத சிசு மரணம்!

தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாதங்களேயான பெண் சிசு மரணித்துள்ளது. யாழ்ப்பாணம், முருசாவில் பகுதியில் இந்தத் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் சிசு திடீரென மயங்கி விழுந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சிசு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சிசுவின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை சாவகச்சேரி வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!