புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் மூவரை திங்கட்கிழமை (19) அதிகாலை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் மூவரை திங்கட்கிழமை (19) அதிகாலை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் பூசை நடத்தி புதையல் தோண்ட முற்பட்ட வேளை கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவம் இடத்துக்கு முல்லைத்தீவு பொலிஸார் சென்றுள்ளனர்.
பின்னர், அங்கு புதையல் தோண்ட முற்பட்டவர்களை கைதுசெய்துள்ளதுடன் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.