இந்த ஜனாதிபதி தேர்தலே வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்
நாட்டில் பொலிஸ் மா அதிபர் (IGP) இல்லாத போதும் தேர்தல்களை நடத்துவதற்கு பொலிஸார் சிறந்த ஆதரவை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலே வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என உள்ளூராட்சித் தேர்தலை மையமாகக் கொண்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் ( PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்தத் தேர்தலின் போது அரச சொத்துகள் துஷ்பிரயோகம் மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் பொலிஸ் மா அதிபர் (IGP) இல்லாத போதும் தேர்தல்களை நடத்துவதற்கு பொலிஸார் சிறந்த ஆதரவை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் 75% முதல் 80% வரையிலான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.