IMF நிதி தொடர்பான உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அனைத்து விடயங்களும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி வசதிகள் தொடர்பில் பொதுமக்களிடம் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற வாராந்த ஊடக சந்திப்பு இன்று தகவல் திணைக்களத்தில் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அனைத்து விடயங்களும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் பிரகாரம் பணத்தின் மீதான முழு அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் விசேட அம்சம் என்னவெனில் 48 மாதங்களில் இலங்கையை யார் ஆட்சி செய்தாலும் அரசியல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் உடன்பட்ட வேலைத்திட்டத்தையே அமுல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.