சுக்கிரனால் இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்... உங்க ராசி என்ன?
நவகிரகங்களில் சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல், மகிழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.

நவகிரகங்களில் சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல், மகிழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.
சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல முப்பது நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.
சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். இதுவரை தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் டிசம்பர் 25ஆம் திகதி அன்று செவ்வாய் பகவான் ஆட்சி செய்யும் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்.
சுக்கிர பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படுத்தும். சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: தனுசு ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் இந்த மூன்று ராசிகளுக்கு அமோக பலன்கள்!
மகர ராசி
சுக்கிர பகவான் உங்கள் ராசியில் 11ம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும்.
இதுவரை சிக்கலில் இருந்த விஷயங்கள் அனைத்தும் முடிவடையும். நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷப ராசி
சுக்கிரன் உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். உங்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் நல்ல ஆரம்பத்தை கொடுக்கும்.
எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். நீதிமன்ற வழக்குகள் வெற்றியடையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம் ராசி
சுக்கிர பகவான் உங்களுக்கு பணவரவை உண்டாக்க போகின்றார். உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். சிக்கிக் கடந்த பணம் உங்களை தேடி வரும் நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் குறையும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.