மதுபோதையில் நீராடச் சென்ற இளைஞனை காணவில்லை
இவர் வேலை செய்த டயர் கடையில் பிறந்தநாள் விழா நடத்திவிட்டு மது அருந்திவிட்டு நீராடச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹங்வெல்ல அடிகல பிரதேசத்தில் களனி ஆற்றில் குளிப்பதற்குச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்த இளைஞன் மேலும் இருவருடன் நேற்று (16) மாலை களனி ஆற்றில் குளிப்பதற்குச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதுக்க பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இவர் வேலை செய்த டயர் கடையில் பிறந்தநாள் விழா நடத்திவிட்டு மது அருந்திவிட்டு நீராடச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன நபரை தேடும் பணியில் ஹங்வெல்ல பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று மாலை கிரியெல்ல கரதான பிரதேசத்தில் பெண் ஒருவர் கனுகல்ல கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
அளுத்வத்த, கனுகல்ல பிரதேசத்தில் வசிக்கும் 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்துள்ளது.
கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.