மாற்றத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றில் இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான ஆட்டம் இன்று (07) நடைபெற உள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றில் இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான ஆட்டம் இன்று (07) நடைபெற உள்ளது.
இந்த போட்டி ஹராரேயில் இலங்கை நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பலம் வாய்ந்த வீரர்களான சகலதுறை ஆட்டக்காரர் ஜேசன் ஹோல்டர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ளதால் அவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த சுற்றில் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கை அணி ஏற்கெனவே ஒருநாள் உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.