ரயில் கட்டுப்பாட்டாளர்கள் பணிபுறக்கணிப்பு காரணமாக மக்கள் அவதி

நேற்று (22) இரவு ரயில் கட்டுப்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

ஆகஸ்ட் 23, 2023 - 11:17
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் பணிபுறக்கணிப்பு காரணமாக மக்கள் அவதி

நேற்று (22) இரவு ரயில் கட்டுப்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

ரயில் உப கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று மாலை 7 மணியளவில் மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் பணிபுரியும் மற்றுமொரு ஊழியரால் ரயில் உப கட்டுப்பாட்டாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, உடனடி நடவடிக்கையாக, அந்த நிலையத்தில் இருந்து ஓடும் ரயில்களில் சேவையில் ஈடுபடாமல்,  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், இரவு அஞ்சல் ரயில் தாமதமாகியதால் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், தொழிற்சங்க நடவடிக்கையை இரவு 09:00 மணியுடன் முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்தது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!