முடிவுக்கு வருகிறது பாராளுமன்றக் கூட்டத் தொடர்
புதிய அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதியுடன் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு நிறைவடையும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் விரைவில் வெளியிடப்படும் எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.