நோர்வே தூதரகம் இன்று முதல் மூடப்படுகிறது

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் மேற்கொள்ள உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 31, 2023 - 11:21
நோர்வே தூதரகம் இன்று முதல் மூடப்படுகிறது

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று (31) முதல் மூடப்பட உள்ளது.

வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளது.
 
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் மேற்கொள்ள உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்லோவாக்கியா, கொசோவோ மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களும் இந்த ஆண்டு நிறுத்தப்படும் என நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!