சாரதிகளுக்கு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

குறித்த சாரதிகள் பற்றிய தகவல்கள், அபராதம் செலுத்தப்படும் தபால் நிலையங்கள் ஊடாக தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

மார்ச் 24, 2024 - 14:09
சாரதிகளுக்கு அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த சாரதிகள் பற்றிய தகவல்கள், அபராதம் செலுத்தப்படும் தபால் நிலையங்கள் ஊடாக தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

குற்றத்தின் தன்மை, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையம், சாரதி அனுமதி பத்திரத்தின் தகவல்கள் மற்றும் அலைபேசி எண் ஆகிய விவரங்கள் இந்த தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.   

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!