அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமையை பொறுப்பேற்றார்
முன்னாதாக இவர் தொகை மதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார்.

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம, சர்வமத போதகர்களின் ஆசிர்வாத உரையுடன் இன்று திங்கட்கிழமை (10) உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்றார்.
முன்னாதாக இவர் தொகை மதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார்.
அம்பாறை அரசாங்க அதிபராக இருந்து ஓய்வுபெற்றுச் சென்ற ஜே.எம்.ஏ.டக்ளஸின் இடத்திற்கே புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம கடமையேற்றுள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
(பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர்)