ஜனாதிபதியிடம் நன்சான்றுப் பத்திரங்களைக் கையளித்த புதிய உயர்ஸ்தானிகர்கள்
எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர், கிரிகிஸ், ருமேனியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.

இலங்கைக்குப் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உயர்ஸதானிகர்கள் மற்றும் தூதுவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் இன்று (01) கையளித்தனர்.
எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர், கிரிகிஸ், ருமேனியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.
இன்று நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு,
- மென்சி சிபோ டிலாமினி – எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர்
- ஸ்டெலுடா அர்ஹைர் – ருமேனியா தூதுவர்
- அஸ்கர் பெஷிமோவ் – கிரிகிஸ் குடியரசின் தூதுவர்
- ஷலர் கெல்டினசரோவ் – துர்க்மெனிஸ்தானின் தூதுவர்
இதனையடுத்து, புதிய உயர்ஸ்தானிகரும் தூதுவர்களும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கவுடன் கலந்துரையாடினர்.