திங்களன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது; வெளியான தகவல்

எனினும், அவர்கள் பதவி ஏற்காத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவருகிறது.

ஏப்ரல் 16, 2022 - 21:19
திங்களன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது; வெளியான தகவல்

எதிர்வரும் 18ஆம் திகதி புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்களை மேற்கொள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்கள் பதவி ஏற்காத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவருகிறது.

எனினும் புதிய அமைச்சரவையில் பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெறமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.    

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!