துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக முதலில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்கிஸை படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் படோவிட்ட பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக சுடப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக முதலில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படோவிட்ட பகுதியில் வசித்து வந்த 31 வயதுடைய தரிந்து மதுஷன் சுவாரிஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது தொடர்பான விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.