இறப்பர் பட்டி கழுத்தை நெரித்ததில் சிறுவன் உயிரிழப்பு
சுமார் அரை மணித்தியாலத்துக்கும் மேலாக முற்றத்தில் கிடந்த சிறுவன் தொடர்பில் அயலவர் அறிவித்ததன் பின்னரே பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

கலவான, பொதுபிட்டிய, பனாபொல பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுவன் கழுத்தை இறப்பர் பட்டி இறுக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொத்துபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் தலையில் இரும்பு கம்பி மோதியுள்ளதுடன், ரப்பர் பட்டியால் கழுத்து நெருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் அரை மணித்தியாலத்துக்கும் மேலாக முற்றத்தில் கிடந்த சிறுவன் தொடர்பில் அயலவர் அறிவித்ததன் பின்னரே பெற்றோருக்கு தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஆபத்தான நிலையில் பொத்துப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக கலவான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பொத்துப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.