ஐஸ்க்ரீமுக்குள் இருந்த மனித விரல்.. அதிர்ச்சியடைந்த பெண் வைத்தியர்
பின்னர் அவர் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று அதற்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்தியா – மும்பையின் மலாட் பகுதியில் 27 வயதான பெண் வைத்தியர், கோன் ஐஸ்கிரீம் ஒன்றை இணையத்தில் ஓர்டர் செய்துள்ளார்.
பின்னர் அவர் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று அதற்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து அவர், உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
கோன் ஐஸ்கிரீமில் இருந்தது மனித விரல் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அதனை தடயவியல் பிரிவுக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் “மும்பையின் மலாட் பகுதியில், ஒன்லைனில் ஓர்டர் செய்த கோன் ஐஸ்கிரீம்க்குள் ஒரு மனித விரலின் துண்டை கண்டு பெண் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஐஸ்கீரீம் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.