ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி அதிருப்தி

13வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 13, 2023 - 12:18
ஆகஸ்ட் 13, 2023 - 12:19
ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி அதிருப்தி

13வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி முன்னெடுக்கும் அரசியல் செயற்பாடுகளை கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நாடு ஜனநாயக அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்வதாக அதன் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

மேலும், ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை பிளவுபடுத்த முயற்சித்ததன் காரணமாகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரத்தை இழந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினைக்கு ஏதேனும் தீர்வு காணப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள், ஹர்த்தால்கள் மற்றும் போராட்டங்களிலிருந்து எந்தவொரு கட்சியும் பாடம் கற்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து துறைகளிலும் நெருக்கடியான சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி நடைபெற்ற ஹர்த்தாலின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். (News21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!