வேலை நிறுத்தம் குறித்து ரயில் நிலைய அதிபர்கள் இன்று இறுதி முடிவு
தமது கோரிக்கைகள் தொடர்பிலான எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகள் தொடர்பிலான எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் இணக்கம் தெரிவித்த போதிலும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நிலைய அதிபர்கள் அண்மையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், உரிய பிரச்சினையை அமைச்சரவையில் முன்வைத்து தீர்வு வழங்கப்படும் என அமைச்சரின் உறுதிமொழிக்கு அமைய பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகளுக்கு அமைச்சரவை நேற்று (15) கவனம் செலுத்தாததால், இன்று காலை கூடி தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.