09ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை ஆரம்பம்
09ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

09ஆவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
நாளை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற அமர்வை ஒத்திவைத்தார்.
இதன்படி நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.