அஸ்வெசும பயனாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
உதவிகளைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 20 லட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கப்படும்

அஸ்வெசும நலன்புரி திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெரணியகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான உதவிகளைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 20 லட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.