பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டன
பாடசாலை விடுமுறை - கல்வித் திணைக்களம் அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் 01.02.2024 வியாழக்கிழமை கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படும்.
மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 11.01.2024 வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இதனை, கல்வித் திணைக்களம் அறிக்கையொன்றை விடுத்து நேற்று (02) தெரிவித்துள்ளது.