உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் திகதி வெளியானது

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 3,46,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

மே 29, 2024 - 13:19
உயர்தர  பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் திகதி வெளியானது

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை மறுதினம் (31) வெளியிடப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 3,46,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் 2,81,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!