ஜூலை 17க்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி வெளியாகும்
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இம்மாதம் 17 க்குப் பின்னர் வெளியிடப்படும் என தேர்தல்கள்ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
'2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது.
இந்த நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் இம்மாதம் 17 க்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி வெளியிடப்படும்.
எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதிக்கும் அக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்" என அவர் கூறியுள்ளார்.