உள்ளூராட்சி தேர்தலில் களமிறக்கப்படும் நாற்காலி சின்னம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பல கட்சிகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பல கட்சிகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன.
அவர்கள் நாற்காலி சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்காக வேறு பல சிறு கட்சிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வரவிருக்கும் தேர்தலில் அரசாங்கத்துக்கு போட்டியாக ஒரு பொதுக் கூட்டணியாக முன்னேறுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
கடந்த காலங்களில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை வகித்த நபர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் ஆகியோர் இந்தக் கூட்டணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்த உள்ளூராட்சி உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.