ஆசிரியர் - அதிபர்கள் இன்று முதல் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் 

இன்று முதல் மாகாண கல்வி மற்றும் பிராந்திய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஜுலை 22, 2024 - 13:18
ஆசிரியர் - அதிபர்கள் இன்று முதல் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் 

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று (22) முதல் இரண்டு வாரங்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று முதல் மாகாண கல்வி மற்றும் பிராந்திய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

எதிர்வரும் பதினைந்து நாட்களில் வகுப்பறைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாகவும், சகல வெளி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசியல் இயக்கங்களை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிக்கவில்லை என ஆசிரியர் - அதிபர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!