மாணவர்களுக்கு 30 சதவீத விலைக்கழிவில் அரசாங்கத்தால் பயிற்சிப் புத்தகங்கள்
பாடசாலை மாணவர்களுக்கு 30சதவீத விலைக்கழிவில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு 30சதவீத விலைக்கழிவில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து, தேவையான பயிற்சிப் புத்தகங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
அரச அச்சக கூட்டுத்தாபனம் 125 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ள நிலையில், தேவையானளவு புத்தகங்களை அச்சிடுவதற்கு கூட்டுத்தாபனம் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, அரச அச்சக கூட்டுத்தாபனத்தில் காகித தட்டுப்பாடு எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.