பிரான்ஸை விட்டு வெளியேற டெலிகிராம் CEOக்கு தடை

வாரத்திற்கு 2 முறை பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 29, 2024 - 20:29
 பிரான்ஸை விட்டு வெளியேற டெலிகிராம் CEOக்கு தடை

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ், பிரான்ஸில் வைத்து அந்நாட்டு பொலிஸார் கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் (Telegram ) துணை போவதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் அவர் மீது குற்றங்கள் சாட்டப்பட்டன. 

அவரது கைதுக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்படுகின்றன. 

இந்நிலையில், பாவெல் துரோவ் மீதான குற்றச்சாட்டுகளை பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்தனர். இதையடுத்து பாவெல் துரோவுக்கு பிணை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

5 மில்லியன் யூரோக்கள் பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்டனர். மேலும், அவர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும். பிரான்ஸை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

வாரத்திற்கு 2 முறை பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!