மாத்தறை சிறைச்சாலையில் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 23, 2025 - 11:05
மாத்தறை சிறைச்சாலையில் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதை கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

எவ்வாறாயினும், அமைதியின்மையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் நேற்று (22) இரவு கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த நேரிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை அழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியை வேறு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பகுதியில் இருந்து வெளியே வந்த சுமார் 500 கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்து அமைதியின்மையுடன் நடந்து கொண்டதால் இந்த நிலை ஏற்பட்டதாகத் கூறப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!