ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், இன்றையதினம் (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்பதால், பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அக்கறையுடன் செயற்படுமாறும், இன்றைய பொருளாதார நெருக்கடியுள்ள சூழலில் வீணான சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ.தீபன் திலீசன், நேற்று (24) தெரிவித்தார்.
பஸ் கட்டண உயர்வு, பள்ளிப் போக்குவரத்துக் கட்டண உயர்வு ஆகியவை கல்வித் துறையை பாதித்துள்ளது, இன்றைய அடையாள பணிப்புறக்கணிப்புக்கு பிறகு, 28ஆம் திகதிக்கு பின்னர், நீண்ட வேலைநிறுத்தம் நடத்துவது குறித்து முடிவெடுப்போம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.