நாடு முழுவதும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்காததே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்காததே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சம்பள முரண்பாடு தொடர்பில் எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க சிறைச்சாலை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு இல்லாததால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி.திஸாநாயக்கவிடம் கேட்டபோது, இவ்வாறான பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார்.