பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஆங்கிலபாட ஆசிரியர் கைது
மாணவியை மருத்துவ பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

தெவிநுவர பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சம்பந்தப்பட்ட பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறார், ஆங்கிலத்தை நன்கு கற்றுத்தருவதாக தெரிவித்து மாணவியுடன் நெருக்கமாகப் பழகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் மாணவியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவியை மருத்துவ பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,
கைதுசெய்யபட்டுள்ள சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.