667 முறை மகளின் பெயரை பச்சை குத்தி உலக சாதனை படைத்த நபர்... யார் தெரியுமா?

கின்னஸ் சாதனைக்காக பல்வேறு வகைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனை படைப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. 

செப்டெம்பர் 13, 2023 - 16:40
667 முறை மகளின் பெயரை பச்சை குத்தி உலக சாதனை படைத்த நபர்... யார் தெரியுமா?

கின்னஸ் சாதனைக்காக பல்வேறு வகைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனை படைப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. 

அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தனது மகளின் பெயரை உடலில் 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 
அவரது பெயர் மார்க் ஓவன் எவன்ஸ். 49 வயதான இவர் ஏற்கனவே தனது மகளின் பெயரான லூசி என்பதனை 267 முறை பச்சை குத்தி கடந்த 2017-ம் ஆண்டு சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் 2020-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டீட்ரா விஜில் என்பவர் தனது பெயரை உடலில் 300 முறை பச்சை குத்தி மார்க் ஓவன் எவன்ஸ்சின் சாதனையை முறியடித்தார். இதைத்தொடர்ந்து எவன்ஸ் விஜிலின் சாதனையை முறியடித்து மீண்டும் சாதனை படைக்க திட்டமிட்டார்.

அதன்படி கின்னஸ் சாதனை அமைப்புக்கு தகவல் தெரிவித்து, அதன் அடிப்படையில் 2 டாட்டூ கலைஞர்கள் மூலம் தனது உடலின் முழுப்பகுதியிலும் மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த சாதனையை எனது மகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!