வெறுங்கையுடன் நாடு திரும்பியது இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை அணி ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று(10) காலை நாடு திரும்பியுள்ளது.
நேற்று (09) இடம்பெற்ற போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
இந்தத் தோல்விக்குப் பின்னர், இலங்கை அணி ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.
நடப்பு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் களமிறங்கிய இலங்கை அணி இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.