இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியா: விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள தகவல்!

கிரிக்கெட் சபையின் ஆலோசகராக தெரிவு செய்யப்பட்ட மஹேல ஜயவர்தனவுக்கு மாதம் 27 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்கப்படுகிறது

நவம்பர் 10, 2023 - 14:19
நவம்பர் 10, 2023 - 14:21
இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியா: விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னையின் தலைவர் விமல் வீரவன்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09) இடம்பெற்ற, ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய சட்ட கட்டமைப்பை சட்டமூலம் ஊடாக அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றிய போது தனது சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.

வெறுங்கையுடன் நாடு திரும்பியது இலங்கை கிரிக்கெட் அணி

அங்கு மேலும் உரையாற்றிய விமல் வீரவன்ச, “எமது கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு வேண்டிய வசதிகளை பெற்றுக்கொடுப்பற்கு போதிய நிதியில்லை என்று கூறுகின்றனர். ஆனால் கிரிக்கெட் சபையின் ஆலோசகராக தெரிவு செய்யப்பட்ட மஹேல ஜயவர்தனவுக்கு மாதம் 27 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஐ.சி.சி.யின் தலைவர்தான் எல்.பி.எல். போட்டியை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெற சிறிது காலத்திற்கு முன்பாக நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு பணித்தாரோ தெரியவில்லை. ஏனெனில், ஐ.சி.சி.யின் தலைவர் தனியார் விமானத்தில் வருகைத் தந்து, ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் பிரதானி சாகல ரத்னாயக்கவை சந்தித்துள்ளார்.

எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்... ஏமாற்றத்தை சந்தித்தேன்... குசால் மெண்டிஸ்!

இதன்போது இலங்கை கிரிக்கெட் சபைக்கு உள்ள அநாவசிய அழுத்தங்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார் என எமக்கு தெரியவந்துள்ளது” என அவர் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!