எல்.ஜி.எம். படத்தின் முதல் பாடல் வெளியானது

லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் முதல் பாடலான 'சலனா' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஜுன் 16, 2023 - 14:06
எல்.ஜி.எம். படத்தின் முதல் பாடல் வெளியானது

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இதன் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இதையடுத்து லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் முதல் பாடலான 'சலனா' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!