பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வாள்வெட்டு; பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்
அளவெட்டிப் பகுதியில் உள்ள வாள்வெட்டுக் குழு ஒன்று இரண்டாக பிரிந்த நிலையில், இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று (04) மாலை வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, குறித்த வாள்வெட்டு குழுவைப் பிடிப்பதற்காக தெல்லிப்பழை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமையால் அப்பகுதியில் பதட்ட நிலைமை ஏற்பட்டது.
அளவெட்டிப் பகுதியில் உள்ள வாள்வெட்டுக் குழு ஒன்று இரண்டாக பிரிந்த நிலையில், இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
அளவெட்டி பகுதியைச் சேர்ந்த வாள்வெட்டு குழுவின் உறுப்பினர் ஒருவரான 26 வயது இளைஞன், வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருப்பு நிற ரீ-சேர்ட் அணிந்து, முகத்தையும் கருப்புத் துணியால் மூடியவாறு, ஹயஸ் வானில் வந்த 6 பேர் கொண்ட குழு, மேற்படி இளைஞனை சாரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்த வாள்வெட்டுச் சம்பவத்தையடுத்து, ஹயஸ் வானில் வந்தவர்களை பிடிக்க தெல்லிப்பழை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.