ஊஞ்சல் ஆடிய சிறுமி பலி: தந்தை படுகாயம்!

பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தங்காலை பகுதியில் பதிவாகியுள்ளது.

ஜுன் 19, 2023 - 14:47
ஊஞ்சல் ஆடிய சிறுமி பலி: தந்தை படுகாயம்!

பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தங்காலை பகுதியில் பதிவாகியுள்ளது.

நெடோல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நெவிந்தி யஹாரா தேவ்மினி என்ற 9 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி, தனது தந்தையுடன் வீட்டில் உள்ள கொங்கிரீட் கம்பத்தில் நேற்று (16) ஊஞ்சல் ஆடச்சென்றபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயமடைந்த நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!